இலங்கையில் திருமணமாகாத இளைஞர்,யுவதிகளுக்கு அடிக்கப் போகும் அதிஷ்டம்..!!

இலங்கையில் திருமணமாகாத இளைஞர்கள், யுவதிகளுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இளைஞர், யுவதிகளுக்காக அமுல்படுத்த திட்டமிட்டிருக்கும் விவசாய கூட்டுறவு வேலைத்திட்டத்திற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 55 பேர்ச் காணி வழங்கப்படவுள்ளது. அதில் வீடொன்றை அமைக்க 15 பேர்ச் காணியையும் விவசாய நடவடிக்கைகளுக்காக 40 பேர்ச் காணியும் வழங்கப்படவுள்ளது.இந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியுள்ளார். இதுபற்றி தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் அமைச்சர் கூறினார்.

ஹம்பாந்தோட்டையில் கிராம எழுச்சித் திட்டம் ஒன்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்