இன்னும் இரு வாரங்களில் நாட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய மாற்றம்… ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி…!

இரண்டு வாரங்களில் நாட்டில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து, கசிப்பு இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மனைவியைத் தாக்குகின்றனர். பொருட்களை நிலத்தில் வீசுகின்றனர். நோய்வாய்ப்படுகின்றனர். இதனால், பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது. பிச்சைக்காரர்களாக மாறுகின்றனர். இது தவறு என அவர்கள் அறிவார்கள். எனினும், தவறான விடயங்களை செய்து அழிந்து போகின்றனர் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மதுவற்ற கிராமங்களை உருவாக்கத் தேவையான திட்டங்களை தயாரிக்குமாறு அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகத்திடம் தாம் வேண்டுகோள் விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நுவரகல மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டட திறப்பு விழா நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்