எம்மை எவராலும் வீழ்த்த முடியாது…ராஜபக்ஷர்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு…- சஜித் பிரேமதாஸ

ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ச குடும்பம் எமக்கு சவால் அல்ல. அக்குடும்பத்தில் இருந்து கோத்தபாயவோ, பஸிலோ அல்லது சமலோ களமிறங்கினால் நாம் தோற்கடிப்போம்.இனிமேல் நடக்கும் எந்தத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி உறுதி என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.ஐக்கிய தேசியக் கட்சி பல கட்சிகளை ஒன்றிணைத்துக் கொண்டு ஐக்கிய தேசிய முன்னணியாகத் தற்போது திகழ்கின்றது. இனிமேல் இந்தக் கூட்டணி ஜனநாயக தேசியமுன்னணியாக உருவெடுக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவோ எம்மை வீழ்த்தலாம் என்று கனவிலும் கூட இனிமேல் நினைக்கக்கூடாது. எங்கள் பலத்தைஎவராலும் அசைக்க முடியாது. எங்கள் கூட்டணியை எவராலும் உடைக்கவும் முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்