வெளிநாட்டிலிருந்து கொண்ட வரப்பட்ட சொகுசு மைத்தைக்குள் காத்திருந்த மர்மம்… .! முல்லையில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைத்து 100 மேற்பட்ட மதுபான போத்தல்களை இலங்கையின் சுங்கவரி துறையின் குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முல்லைத்தீவில் உள்ள முதுகடுவ பிரதேசத்தில் வைத்து இன்று கைப்பற்றியுள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய 45 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் கடந்த 16 ஆண்டுகளாக இத்தாலியில் நிரந்தமாக குடியேறிய நிலையில் இலங்கைக்கு அடிக்கடி வருகை தந்து குறித்த சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்தமை ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்