கிளிநொச்சி பொதுவைத்தியசாலை விபத்து சிகிச்சைப் பிரிவிற்கான அடிக்கல் பிரதமர் ரணில் தலைமையில் இன்று நாட்டி வைப்பு…!!

வடக்கிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் யாழில் பல நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.இதன்போது பிரதமர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்துடன் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெறும் அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்திலும் பிரதமர் பங்கேற்றுள்ளார். அவருடன் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்