யாழிலிருந்து பயணித்த தனியார் பேரூந்து மீது விஷமிகள் தாக்குதல்…. ! நள்ளிரவில் யாழில் நடந்த பயங்கரம்..!!

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்து மீது விசமிகளால் கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது.யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து மீதே செம்மணி வீதியில் வைத்து கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் பேரூந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளது.இந்த தாக்கதல் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,போட்டியின் காரணமாக இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என்று பிற பேரூந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவத்தால், பேரூந்த வீதியில் நீண்ட நேரம் தொடர்ந்து பயணிக்காமல் நின்றதால் பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்