மதுபோதையில் தள்ளாடிய நபர்கள்…! யாழ் இளைஞர்கள் செய்த மனிதாபிமானச் செயல்…!

யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வரணிப் பகுதியில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 5ஆம் திகதி அதிகாலை வேளையில் நகை மற்றும் பணத்துடன் தப்பியோடிவர் தலைமாறிவாகி இருந்தார். இந்நிலையில் அவர் இன்று கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.அன்றையதினம் ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் சுமார் ஒரு மணி நேரம் வீட்டை சல்லடை போட்டுத் தேடியதுடன் அங்கிருந்த நகைகளையும் பணத்தையும் கொள்ளையிட்டனர்.இதன்போது வீட்டிலிருந்த வெளிநாட்டு மதுபானத்தைக் குடித்து மதுபோதையில் தடுமாறியுள்ளனர்.

சம்பவத்தை அறிந்த அந்தப்பகுதி இளைஞர்கள் உசரடைந்ததால் கொள்ளையர்களில் இருவர் பிடிக்கப்பட்டனர். ஒருவர் நகைகள் மற்றும் பணத்துடன் தப்பி ஓடினார்.கொள்ளையிடப்பட்ட நகைகள் கோப்பாய் பகுதியில் உள்ள ஒருவரிடம் கைமாறியமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரணியில் கொள்ளையில் ஈடுபட்ட வேளையில் இளைஞர் ஒருவரை பிடித்த இளைஞர்கள், விடுதலைப் புலிகள் பாணியில் தண்டனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்