திருமணமான அடுத்த நாள் கணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!!

சிலாபத்தில் புதிதாக திருமணமான பெண்ணொருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தி சென்ற விடயம் அறியாத கணவர், மனைவி வீட்டில் இல்லாமை தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிலாபம் தாப்பவத்தை பிரதேசத்தை சேர்ந்த ஜெராட் ரொஷான் மலிந்த என்ற 27 வயதான இளைஞனே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி ராகம பிரதேசத்தை சேர்ந்த மதீரா செவ்வந்தி என்பவரை திருமணம் செய்து சிலாபம் பிரதேசத்தில் குடியேறினோம். 27ஆம் திகதி மாலை வெளியே சென்று இரவு 7 மணியளவில் வீடு திரும்பும் போது மனைவியை காணவில்லை.

அவரை எல்லா இடத்திலும் தேடி விட்டேன். அதனால் முறைப்பாடு செய்ய வந்ததாக கணவர் பொலிஸ் நிலையத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண்ணை அவரது முன்னாள் காதலன் கடத்திச் சென்று பெண்ணின் தாயார் வீட்டில் விட்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்வதற்கு சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருணமாக அடுத்த நாளில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றமையானது கணவனை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்