மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி! 18 வயதிலும் குறைந்த மனித எலும்புக்கூடு மீட்பு!!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 145 ஆவது தடவையாக இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியானது சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடு அடையாளப்படுத்தப்பட்டும், அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது.

இந்நிலையில் இன்று காலை சந்தேகத்திற்கு இடமான சிறு பிள்ளை ஒன்றின் மனித எலும்புக்கூடு மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த மனித எலும்புக்கூட்டின் அருகில் உலோக பொருள் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது.

தற்போது குறித்த சிறு மனித எலும்புக்கூடு முழுமையாக மீட்கப்பட்டு சுத்தப்படுத்துவதற்காக மத்திய பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூடு 18 வயதுக்குட்பட்ட சிறுவருடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதே நிலையில் இன்றைய தினம் குறித்த புதைகுழி தொடர்பான ஆய்வு முடிவுகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தற்போதுவரை ஆய்வு முடிவுகள் வெளிவரவில்லை.

இன்று மாலைக்குள் அல்லது நாளை முடிவுகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறித்த மனித புதைகுழியில் 316 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 307 மேற்பட்ட மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்