ஆலயக் கதவை உடைத்து அம்மன் தாலியைத் திருடிய விசமிகள்! ஊர் மக்கள் கவலை!!

திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மேபீல்ட் தோட்ட சாமஸ் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பிரதான நுழைவாயில் உடைக்கப்பட்டு அம்மன் தாலி களவாடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த 2018.04.20 அன்று இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதன்போது அம்மனுக்கு இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க தாலி அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பத்தனை பொலிஸாரும், நுவரெலியா பொலிஸ் குற்ற தடுப்பு பிரிவினரும், கைரேகை ஆய்வு பிரிவினரும் ஆலய கட்டடத்திற்கு சென்று சோதனை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக விசாரணகைளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்