கொழும்பில் அதிநவீன கார் விபத்து! காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி!!

கொழும்பில் விபத்துக்குள்ளான வாகனத்திற்குள் 68 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருதானை பிரதேசத்தில் நவீன மோட்டார் வாகனம் ஒன்று இன்று அதிகாலை 3.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த வாகனத்தை சோதனையிட்ட போது 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான 68 கிலோ கிராம் கஞ்சா பொதி பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நவீன ரக மோட்டார் வாகனம் மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் பாலத்தில் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

விபத்தின் பின்னர் வாகனத்தில் இருந்த நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்