இன்றைய ராசிப்பலன்-14.02.2019

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் சிலருக்கு காபியில் தொடங்கும். சிலருக்கு செய்தித்தாளில் ராசிபலன் பார்த்த பின்பு தான் எல்லாமே. அப்படிப்பட்டவர்களுக்காக இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோமா… அப்படி இன்னைக்கு கும்ப ராசிக்காரர் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத விவாதங்களையும் முன் பின் தெரியாத புதிய ஆட்களிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்திடுவது நல்லது.

மேஷம்:
உடன் பிறந்த சகோதரர்களுகை்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். பொன் மற்றும் பொருள் சேர்க்கைகள் உண்டாகும். நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்தும் உங்களுக்கான உதவிகள் வந்து சேரும். உங்களுடைய வாக்குறுதிகளினால் உங்களுக்கு புகழ் கிடைக்கும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே உள்ள உறவுநிலைகள் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

ரிஷபம்:
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உயர் கல்வி பயில்வோருக்கு சில விரயச் செலவுகள் வந்து சேரும். மனதுக்குள் புதுவித ஆராய்ச்சி எண்ணங்கள் வந்து போகும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற உங்களுடைய பேச்சுத் திறமையின் மூலமாக உங்களுக்கு நற்பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.

மிதுனம்:
கால்நடைகளின் மூலமாக சிறு சிறு விரயச் செலவுகள் வந்து போகும். வங்கிகளில் நீங்கள் எதிர்பார்த்திருந்த கடனுதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்கு சாதகமான நாளாக இன்று இருக்கும்.புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புனித யாத்திரைகள் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களுடைய முழு ஆசிர்வாதமும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

கடகம்:
தொழில் சம்பந்தப்பட்ட புதிய முடிவுகளை எடுக்கும்போது, கொஞ்சம் கவனத்துடன் செயல்படுங்கள். வாகனங்களில் பயணம் செய்கின்ற பொழுது, கொஞ்சம் அதிக எச்சரிக்கையுடன் இருங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உடன் பணிபுரியும் சக ஊழைியர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். போட்டிகளில் கலந்து கொள்ளும்போது, கொஞசம் நிதானத்துடன் செயல்படுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ஆகவும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்:
உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். மனதுக்குள் தோன்றும் தேவையற்ற எண்ணங்களினால் மனச்சோர்வு உண்டாகும். எந்த விலையுயர்ந்த பொருள்களைக் கையாண்டாலும் அதில் கொஞ்சம் கவனமாக இருங்கள். எதிர் பாலினத்தவர்களிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

கன்னி:
பணிகளில் நீங்கள் மேன்மை அடைவதற்கான செயல்களைச் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பங்குதாரர்களால் உங்களுக்கு சாதகமான சூழல்களே உருவாகும். பொருளாதாரம் மேம்படும். தேவையில்லாத வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சாம்பல் நிறமும் இருக்கும்.

துலாம்:
விவாதங்களில் ஈடுபடுவதின் மூலம் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். உங்களுடைய புதிய தொழில் முயற்சிகளினால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்கின்ற பொழுது கொஞ்சம் கவனமாக இருங்கள். அதேபோல் பணப்புழக்க விஷயங்களிலும் கொஞ்சம் கவனத்துடன் இருங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்:
உங்களுடைய செயல்பாடுகளில் அதீத வேகம் உண்டாகும். பெற்றோர்கள் மற்றும் அவர்களுடைய உடல்நலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கி நிற்கும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளும் சாதகமான சூழல்களும் அதிகரிக்கும். உங்களுடைய லட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மூலிகை சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுகிறவர்களுக்கு தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மிதமான நீல நிறமும் இருக்கப் போகிறது.

தனுசு:
புதிய நபர்களின் மூலமாக, உங்களுடைய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வாகனங்களின் மூலமாக உங்களுக்கு லாபங்கள் உண்டாகும். உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த உறவுநிலை மேம்படும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுகிறவர்கள் கொஞ்சம் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகம் இருக்கும்.

மகரம்:
வீட்டில் பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். நிர்வாகத்தில் உங்களுடைய முழுத் திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். நீண்ட நாட்களாக மனதுக்குள் நினைத்து வந்த காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வாயிலாக புதிய புதிய தொழில் வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.

கும்பம்:
உங்களுடைய உடன் பிறந்தவர்களால் உங்களுககு சுப விரயச் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் பணிச்சுமை அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்குக் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடையஅதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

மீனம்:
உயர் அதிகாரிகளுடைய முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்வதால் நன்மைகள் உண்டாகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அறச் செயல்களுக்காக நன்கொடைகள் கொடுத்து மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்