இன்றைய ராசிப்பலன் 13.02.2019

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் சிலருக்கு காபியில் தொடங்கும். சிலருக்கு செய்தித்தாளில் ராசிபலன் பார்த்த பின்பு தான் எல்லாமே. அப்படிப்பட்டவர்களுக்காக இன்றைக்கு எந்த ராசிக்கு என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோமா… அப்படி இன்னைக்கு கும்ப ராசிக்காரர் எதிலும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையில்லாத விவாதங்களையும் முன் பின் தெரியாத புதிய ஆட்களிடம் பேசுவதையும் முற்றிலும் தவிர்த்திடுவது நல்லது.

மேஷம்:
உறவினர்களின் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். குழந்தை பாக்கியம் தளளிப் போய்க்கொண்டே இருந்தவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும். அதன்மூலம் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பெரியோர்களிடம் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வீட்டில் குழந்தைகளின் மூலமாக அனுகூலமான செய்திகள் வந்து சேரும். தந்தையின் வழி உறவினர்களால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

ரிஷபம்:
தலைமைப் பொறுப்பில் இருக்கின்றவர்களுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். உயர் கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இயந்திரங்கள் தொடர்புடைய துறைகளில் பணிபுரிகின்றவர்கள் மேன்மை பெறுவார்கள். மனைவியின் உறவுகள் வழியிலும் லாபம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். வாகனங்களினால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழிலில் எதிரிகளால் சிறுசிறு பிரச்னைகள் வந்து போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.

மிதுனம்:
தொழில் முறைகளில் அவ்வப்போது சோர்வுகள் ஏற்படுவதால் கால தாமதங்கள் ஏற்படும். உறவினர்களுக்கு இடையே மனக்கவலைகள் வந்து போகும். தந்தையிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். உடன் பிறப்புகளால் உங்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும். கொஞ்சம் நிதானமாக நடவடிக்கையினால் நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உணவு விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

கடகம்:
தொழிலுக்குள் உங்களுடைய மறைமுக எதிர்ப்புகளை கண்டு களைவீர்கள். உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். உங்களுடைய பிடிவாத குணத்தை கொஞ்சம் மாற்றிக் கொண்டு சூழ்நிலைக்கு தகுந்தவாறு நடந்து கொள்ள வேண்டும். பணிபுரியும் இடங்களில் உடன் பணிபுரிகின்ற சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். பயணங்களின் மூலம் நீங்கள் எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

சிம்மம்:
நீங்கள் எந்த பொருளையும் கையாளும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய பேச்சுத் திறமையினால் பாராட்டப்படுவீர்கள். கல்வியில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தங்கள். பயணங்களின் மூலமாக வீண் செலவுகள் உண்டாகும். உடன் பிறப்புகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லவும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் உண்டாகும். பரம்பரை சொத்துக்களின் மூலமாக லாபங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமாகவும் இருக்கும்.

கன்னி:
வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். தொழிலில் பெரிய பெரிய செயல் திட்டங்களை நிறைவேறுவதற்கான வாய்ப்புகளும் அதற்கான ஆற்றலும் உண்டாகும். உங்களைத் தேடி வருகிறவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பீர்கள். பணியில் உங்களுக்குப் பதவி உயர்வுகள் கிடைக்கும். நீங்கள் எடுத்த காரியங்கள் உங்களுடைய எண்ணங்கள் போல வெற்றி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீல நிறமும் இருக்கும்.

துலாம்:
எதிர்பார்க்காத சுப செய்திகளினால் பண நெருக்கடிகள் உண்டாகும். உங்களுடைய முழு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களுடன் கொஞ்சம் அனுசரித்துச் செல்வதால், உங்களுக்குள் இருநு்த தேவையற்ற மனக்கசப்புகளைத் தவிர்க்க முடியும். மனைவியிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் உண்டாகும். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள். மருத்துவத் துறையில் உங்களுக்கு சாதகமான வாய்ப்புகளும் நல்ல பெயரும் உண்டாகும். பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்:
நண்பர்களுடன் உரையாடுகின்ற போது, கொஞ்சம் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் கையில் எடுத்த காரியத்தை கொஞ்சம் அவசரமின்றி, நிதானமாக நடந்து கொள்ளுங்கள். எந்த காரியத்தை எடுத்தாலும் அதை அவசரமின்றி நிதானமாக செய்யுங்கள். உடலில் வலுவும் ஆரோக்கியமும் மேம்படும். வீண் அலைச்சல்களால் நீங்கள் எதிர்பார்த்த பணிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்பத்தில் சில வாக்குவாதங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக வெளிர்நீல நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் இருக்கும்.

தனுசு:
உஷ்ணங்களினால் கொப்புளங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகும். தாய்மாமனுடைய வழியினில் ஆதரவுகள் உண்டாகும். உடல் சோர்வின் மூலமாக பணிபுரிகின்ற இடங்களில் அவச் சொற்கள் உண்டாக நேரிடலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பணியில் அடிக்கடி இடமாற்றங்கள் உண்டாகும். குழப்பமான மன நிலையினால் நெருங்கியவர்களிடம் பிரிவினைகள் உண்டாக வாய்ப்புண்டு. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.

மகரம்:
உறவினர்களுக்கு இடையே தேவையில்லாத வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுங்கள். வெளியூா் சம்பந்தப்பட்ட தொழில் வாய்ப்புகள் உண்டாகும். உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். பயணங்களால் உண்டாகும் அலைச்சல்களால் தேவையில்லாத சோர்வுகள் உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளில் காரிய விருத்தி உண்டாகும். அனைவரையும் கொஞ்சம் அனுசரித்துச் செல்வதினால் எதிர்ப்புகள் குறையும். உடலில் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையாகவும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமாகவும் இருக்கும்.

கும்பம்:
உங்களுடைய பேச்சு வன்மையினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மனதுக்குள் தைரியம் அதிகரிக்கும். நண்பர்களுடைய முழு ஆதரவும் உண்டாகும். வேலையாட்களால் ஏற்படுகின்ற இன்னல்கள் நீங்கி, வீட்டில் சுபிட்சமான சூழல்கள் உண்டாகும். உடன் இருப்வர்களின் குணநலன்களைப் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தந்தையிடம் ஏற்படுகின்ற வாக்குவாதங்களினால் மனக்கசப்புகள் நேரிடும். உழைப்புக்கு ஏற்ற ஊதியங்கள் கிடைக்க கால தாமதங்கள் ஆகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் இருக்கும்.

மீனம்:
பிள்ளைகளிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். ஒருவிதமான வெறுப்புணர்ச்சிகள் உண்டாகும். பெண்கள் மூலமாக உங்களுக்கு சாதகமற்ற சூழல்கள் உருவாகும். எதிர்பாராத தன வரவுகளினால் மேன்மையான சூழல்கள் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். கல்வி பயில்வோருக்கு முன்னேற்றமான சூழல்கள் உண்டாகும். செய்யும் செயல்களினால் சற்று சிந்தித்து செயல்படுங்கள். பழக்கம் இல்லாத புதிய புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். மனதுக்குள் இருக்கின்ற சஞ்சலமான எண்ணங்களினால் உங்களுக்கு குழப்பமான மனநிலைகள் உண்டாகும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் இருக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்