பலருக்கும் தெரியாத தெல்லிப்பளை நாயகி சுஜாத்தாவின் கண்ணீப் பக்கங்கள்…!!

நடிகை சுஜாதா’ இவரை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே சொல்லலாம். உடலை காட்டினால் தான் சினிமாவில் இருக்க முடியும் என நினைத்தவர்கள் மத்தியில் தனது மரணம் வரை கவர்ச்சி காட்டாமல் நடித்த ஒரே நடிகை.உடலைக் காட்டி எப்போதுமே உழைக்க கூடாதென ஆரம்பத்திலேயே நினைத்ததாக அவர் பல போட்டிகளில் கூறி இருந்தார்.சுஜாத்தாவின் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் ஒரு துளியெனும் சந்தோஷம் இல்லை என்றே சொல்ல முடியும்.

சுஜாத்தாவின் தந்தை கேரளாவை சேர்ந்தவர்.ஆனால் இலங்கை யாழ்ப்பாணம் என்ற இடத்தில் தொழில் நிமித்தமாக குடியேறினார்.யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்ற இடத்தில் பிறந்த குழந்தை தான் சுஜாதா.ஆரம்ப பாடசாலை கல்வியை தெல்லிப்பழையில் தொடங்கிய சுஜாதா அவரது தந்தையின் ஆசிரியர் பணி இடம் மாற்றம் காரணமாக இலங்கை காலி என்ற இடத்திற்கு சென்றார். அங்கு தனது பள்ளிப் படிப்பை தொடர்ந்தார்.

சிறு வயதிலேயே துடிப்பு மிக்க சுஜாதா ஒரு விளம்பரத்தில் நடித்ததன் விளைவாக சிங்கள திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைக்க கேட்ட போது சுஜாதாவின் தந்தை படிப்பு முக்கியம் நடிப்பு அல்ல என தடை செய்தார்.சுஜாதாவின் 14 வது வயதில் மீண்டும் சொந்த ஊரான கேரளாவில் குடியேறினார்கள்.அதன் பின் சுஜாதாவிற்கு மேடை நாடக வாய்ப்பு வந்தது தந்தை மறுத்தாலும் தாயின் அனுமதியுடன் நடிக்க அந்த நாடகம் மிக பெரிய ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து அவள் ஒரு தொடர்கதை வாய்ப்பு வந்தது.

தந்தையின் பேச்சு தாயிடம் எடுபடவில்லை. சுஜாதா நடிக்க ஆரம்பித்தார் அதன் பின் தான் விளவு புரிந்தது.பணத்தை கண்டதும் சுஜாதாவின் தாயார் பேயாக மாறினார். வரும் அத்தனை வாய்ப்புகளையும் எடுக்கும் படி கட்டாயபடுத்தினார்.ஓய்வின்றி நடிக்க சொல்லி தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மனமுடைந்து போனார் சுஜாதா. அப்போது அவரது அம்மாவின் பார்வை பணத்தின் மீது மட்டுமே இருந்தது.இந்த நிலையில் மேல் வீட்டில் குடி இருந்தவருடன் காதல் ஏற்பட பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். பிறந்த வீட்டை விட புகுத்த வீடு கொடுமையின் உச்சமானது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்