முகமாலை கண்ணிவெடியகற்றும் பணிகளை பார்வையிட்ட ஜப்பானிய தூதுரக அதிகாரிகள்..!

கிளிநொச்சி, முகமாலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானிய தூதரக அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.முகமாலையில் உள்ள அலுவலகத்திற்கு இன்று பகல் அதிகாரிகள் கொண்ட குழுவினர் விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.மனித நேயக்கண்ணிவெடி அகற்றும் பணியானது ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சார்ப் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப் பணி கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சலைப்பள்ளியில் உள்ள முகமாலை, வேம்பொடுகேணி, கிளாலி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்