இன நல்லிணக்கத்தை வலியுறுத்தி சக்கர நாற்காலியில் இலங்கை இளைஞனின் சாதனைப் பயணம் இன்று கிண்ணியா நகரில்….!

இன நல்லிணக்கத்தினை வலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் ​கோரி நாட்டைச் சுற்றி 1400 கிலோ மீற்றர் தூரத்தினை சாதனைப் பயணமாகக் கொண்டு வலம் வரும் மாற்றுத் திறனாளி முகம்மட் அலி நேற்று கிண்ணியா நகரினை வந்தடைந்துள்ளார்.இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினத்தினையொட்டி நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தவர்கள் மத்தியிலும் இன நல்லிணக்கத்தினை வலியுறுத்துவதோடு, மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும் வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாற்று (சக்கர நாட்காலி ) வலுவுடையோர் வண்டியில் இலங்கை முழுவதுமான தனது சாதனைப் பயணத்தினை ஆரம்பித்துள்ளார். கடந்த முதலாம் திகதி தனது பயணத்தினை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்த இவர் கொழும்பு, நீர்கொழும்பு, காலி,புத்தளம், வெல்லவாய, திருக்கோவில், தம்பிலுவில், பொத்துவில்  அம்பாறை மட்டக்களப்பு ஏறாவூர் ஆகிய பிரதேசங்கள் ஊடாகப் பயணித்து கிண்ணியா நகரினை வந்தடைந்துள்ளார்.இவர் தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும் நாட்டில் நிலையான நல்லிணக்க சமாதானம் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி இப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.கிண்ணியா நகரத்தை வந்தடைந்த இவருக்கு சமூக அமைப்புகள், இளைஞர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் வரவேற்பினை வழங்கியுள்ளனர்.கிண்ணியாவிலிருந்து இதிருகோணமலைக்கு தனது பயணத்தின் 12 ஆவது நாளான இன்று ஆரம்பித்துள்ளார்.

1000 கிலோ மீற்றர் தூரத்தினை 11 நாட்களில் நிறைவு செய்துள்ளதாகவும், இன்னும் 400 கிலோ மீற்றர் தூரத்திற்கு பயணம் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்