வடமாகாண தாய்மார் தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!! பெரும் வேதனையில் காணாமற்போனோரின் உறவுகள்…!!

வடபகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்து குறித்து தென்னிலங்கை ஊடகங்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளன.சமகாலத்தில் தான் பல்வேறு தடவைகள் வட மாகாணத்திற்கு விஜயம் செய்த போதும், எந்தவொரு தாயும் தமது பிள்ளையை காணவில்லை என குறை கூறவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் வடபகுதிக்கு விஜயம் மேற்கொள்ளும் போது, காணமல் போனவர்களின் தாய்மார் என்னை சூழ்ந்து கொண்டனர். பிள்ளை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.எனினும், அண்மைக்காலங்களில் வடபகுதிக்கு சென்ற போது, போதைப்பொருள் பாவனை தீவிரம் அடைந்துள்ளது. அதனை அழிக்குமாறு கோருகின்றனர்.

வட பகுதியில் வாழ முடியவில்லை. சாராயம், கசிப்பு, கஞ்சா போன்றவற்றை இல்லாமல் செய்துவிடுங்கள் என்றே தாய்மார்கள் என்னிடம் கேட்கின்றார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.வட மாகாண ஆளுநர் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் ஜனாதிபதி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

காணாமல் போன தமது உறவுகளை தேடித் தருமாறு, வடக்கு தாய்மார்கள் தற்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு ஒன்று இன்னமும் கிடைக்கவில்லை.இவ்வாறான நிலையில், ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிடுகின்றார் என்றால், அவரை யாரோ தவறான வழியில் வழி நடத்துவதாக, தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்