ஆறு வயது பாடசாலை மாணவன் மீது அதிபர் கொடூரத் தாக்குதல்..!! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி…!

வெலியோய பகுதியில் வண்ணாத்திப் பூச்சிக்கு கால்கள் இல்லை என பாடப்புத்தகத்தில் எழுதிய மாணவனை பாடசாலை அதிபர் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.அதிபரின் கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட 6 வயதான சந்தேவ் என்ற மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.குறித்த மாணவனின் வகுப்பிற்கு சென்ற அதிபர் பல்லி, தேனீ, வண்ணாத்தி பூச்சி மற்றும் கம்பளிப்பூச்சி போன்றவற்றிற்கு கால் உண்டு, இல்லை என சரியாக பதிலளிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.இதற்கு சந்தேவ் வண்ணாத்திபூச்சிக்கு கால்கள் இல்லை என எழுதியுள்ளார். இதனால், கோபமடைந்த அதிபர் மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார்.

பாடசாலை நிறைவடைந்து வீடு சென்ற சந்தேவ் வழமையை போன்று செயற்படாமல் உறங்கியுள்ளார்.பின்னர் விசாரித்த போது அவர் தாக்கப்பட்ட விடயம் தெரிந்து வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பெற்றோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

தனது மகன் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அதிபரின் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்