சட்டவிரோத மின்சாரப் பாவனையால் இலங்கை மின்சார சபைக்கு மிகப்பெரிய வருமானம்!

இலங்கையில் கடந்த வருடம் மின்சாரத்தினை சட்டவிரோதமாக பாவித்த மோசடிக் குற்றத்தில் பலர் கைதுசெய்யப்படதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இதன்படி இரண்டாயிரத்து ஐநூறுபேர் இந்தக் குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு தண்டப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.மின்மானிகளில் அளவீடுகளை மாற்றியமை, சட்ட விரோதமாக மின் இணைப்புக்களை மேற்கொண்டமை உள்ளிட்ட குற்றங்களுக்காகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இத்தகைய குற்றமிழைத்தவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டப்பணம் மூலம், தாம் 130 மில்லியன் ரூபாவினைப் பெற்றதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்