யாழ் கைதடியில் அமையப் போகும் புதிய அம்மன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு…!

யாழ்.கைதடி வடமாகாணசபை முன்பாக வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ கௌரி அம்மனுக்குப் புதிய ஆலயம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(04) நடைபெற்றது.ஆலயத் தலைவர் சிவஸ்ரீ பஞ்சலிங்கம் குருக்கள் தலைமையில் குறித்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்மன் சாமியம்மா,மிருசுவில் துர்க்கை அம்மன் ஆலயப் பிரதம குரு, வண்ணை கலட்டி வீரகத்திபிள்ளையார் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ விவேகானந்தக்குருக்கள், இலங்கை இந்துசமயத் தொண்டர் சபை ஆணையாளர் வை. மோகனதாஸ், உதவி ஆணையாளர் பொ.யோகேஸ்வரா, ஓய்வுபெற்ற யாழ்.தபால் ஊழியர் தவகுலநாதன், ஆலய நிர்வாகத்தவர்கள் மற்றும் அடியார்கள் ஆகியோர் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டி வைத்தனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்