என் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள்….!கதறியழும் பிரித்தானியத் தாயின் கண்முன்னே கருகிய 4 குழந்தைகள்…..!!

பிரித்தானியாவில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தாயின் கண்முன்னே 4 குழந்தைகளும் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்ட் பகுதியில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு (உள்ளூர் நேரப்படி), சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியுள்ளது.

இந்த சம்பவத்தின் போது இரண்டாவது மாடியிலிருந்து ரிலே (8), கீகன் (6), ஆலி (3) மற்றும் அவர்களது நான்கு வயது சகோதரி டிலி ஆகியோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.சிலிண்டர் வெடித்ததும் குழந்தைகளின் தாய் நட்டலி அனிட் (24), தந்தை கிறிஸ் மவுல்டன் (28) ஆகியோர் தங்களுடைய கடைசி குழந்தை ஜாக்கை கையில் தூக்கியவரே முதல் மாடியின் ஜன்னல் பகுதியிலிருந்து வெளியில் குதித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 2 தனியார் நிறுவன ஆம்புலன்ஸ்கள் காயமடைந்த தம்பதி மற்றும் அவர்களுடைய கடைசி குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் கூறும் போது;

நட்டலிக்கு அந்த குழந்தைகள் தான் உலகம். நான் என்னுடைய கழிவறையில் நின்று கொண்டிருக்கும் போது, என்னுடைய குழந்தைகளை யாராவது காப்பாற்றுங்கள் என அலறுவதை போன்ற சத்தம் கேட்டது.வேகமாக வெளியில் வந்த பார்த்த போது தான், இந்த சம்பவம் நடந்திருப்பதை பார்த்தேன் என வேதனையுடன் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்