அகில இலங்கை ரீதியில் மீண்டுமொரு சாதனையை நிலைநாட்டிய யாழ் இந்துவின் மைந்தர்கள்….!!

மட்டக்களப்பு மைக்கல் கல்லூரியால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான 14 வயதிற்குற்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 3ஆம் இடத்தை தனதாக்கியுள்ளது.அகில இலங்கை ரீதியில் 14 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு, புனித மைக்கேல் கல்லூரியின் உள்ளக அரங்கில் நேற்று மாலை இறுதிச்சுற்று போட்டி இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 12 அணிகள் இச் சுற்றுப்போட்டியில் பங்குகொண்டன.இதன் போது இடம்பெற்ற இறுதி பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனும், சிறப்பு அதிதியாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரனும் கலந்துகொண்டனர். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட அகில இலங்கை ரீதியிலான கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கூடைப்பந்தாட்ட அணி முதல் இடத்தை பெற்று வரலாற்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்