இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மண்கவ்வியது இலங்கை…! அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி…!!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 366 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய, இலங்கை அணிகள் மோதும் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன் குவித்து, ஆட்டத்தை இடை நிறுத்தியது.

பின்னர் முதல் இன்னிங்ஸுக்காக களமிறங்கிய இலங்கை அணி நேற்றுமுன்தினம் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 123 ரன் எடுத்து இருந்தது.

இந் நிலையில் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று ஆரம்பிக்க முதல் இன்னிங்சில் 215 ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.இதனால், அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 319 ரன்கள் முன்னிலை பெற்றதுடன் பாலோ-ஒன் கொடுக்காது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தாடி 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 196 ஓட்டங்களை பெற்று, 2 ஆவது இன்னிங்ஸை இடை நிறுதிக் கொண்டது.

அதனால் அவுஸ்திரேலிய அணி மொத்தமாக 515 ஓட்டங்களை இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக நிர்ணயித்தது. 516 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கி துடுப்பெடுத்தாட நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை பெற்றது.லஹிரு திரிமன்ற மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் ஆடுகளத்தில் தலா 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.இந் நிலையில், போட்டியின் நான்காம் நாளான இன்று 17 ஓட்டத்துடன் ஆட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி 51 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.திமுத் கருணாரத்ன 8 ஓட்டத்துடனும், லஹிரு திரிமன்ன 30 ஓட்டத்துடனும் தினேஸ் சந்திமால் 4 ஓட்டத்துடனும், நிரோஷன் திக்வெல்ல 27 ஓட்டத்துடனும் குசல் மெண்டீஸ் 42 ஓட்டத்துடனும், குசல் பெரேரா டக்கவுட் முறையிலும் தனஞ்சய டிசில்வா 6 ஓட்டத்துடனும், சமிக கருணாரத்ன 22 ஓட்டத்துடனும் தில்றூவான் பெரேரா 4 ஓட்டத்துடனும், விஷ்வா பெர்ணான்டோ டக்கவுட் முறையில் ஆட்டமிழக்க குசல் ஜனித் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் மிச்செல் ஸ்டாக் 5 விக்கெட்டுக்களையும், பேட் கம்னின்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஜோய் ரிச்செரட்சன் மற்றும் நேதன் லியோன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனால், இரண்டு போட்டிகள் கொண்ட முரளி – வோர்ன் கிண்ண டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலிய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்