இலங்கையின் 71வது தேசிய தின நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்! (நேரலை)

இலங்கையின் 71வது தேசிய தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் சற்று முன்னர் கொழும்பு காலிமுகத் திடலில் ஆரம்பமாகியுள்ளது.முதற் பெண்மணியின் சகிதம் ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றி வைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். பாடசாலை மாணவ, மாணவிகளால் தேசிய கீதம் பாடப்பட்டது.தேசிய நிகழ்வில் மாலைத்தீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர் மற்றும் வௌிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட விருந்தினர்களின் பங்கேற்புடன் 71வது தேசிய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

71 වන ජාතික දින සැමරුම සජීව විකාශය71 வது தேசிய தின விழா – நேரடி ஒளிபரப்பு

Posted by Maithripala Sirisena on Sunday, February 3, 2019

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்