குளிக்கும் போது பெண்களை ஆபாசமாகப் படமெடுத்த இளைஞனுக்கு நேர்ந்த கதி…!!

கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பெண்களை புகைப்படம் எடுத்த இளைஞனை பொதுமக்கள் பிடித்து தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஜா-எல பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண்களை புகைப்படம் எடுத்த இளைஞனை அந்தப் பகுதி மக்கள் தாக்கியுள்ளனர்.குறித்த பெண்கள் தங்கள் தொழில் செய்யும் இடத்திற்கு அருகில் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தப் பெண்கள் குளிக்கும் போது வீட்டின் கூரை மீது ஏறிய குறித்த இளைஞன் வீடியோ எடுத்துள்ளார்.நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தர்ப்பத்தில் 28 வயதான இளைஞனே இவ்வாறான செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த இளைஞனை அடித்த பிரதேச மக்கள் பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்