புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு இராணுவத்தினால் புதிய வீடுகள்….!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற இரண்டு மாணவிகளுக்கு இராணுவத்தால் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.வவுனியா மாவட்டத்தில் சிவபுரம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஹரிதிக் ஹன்சுஜா மற்றும் நெலுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆர்.நிவர்சனா ஆகியோர் வன்னி மாவட்டத்தில் அதிக புள்ளிகளைப் புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றுள்ளனர்.அதனடிப்படையில், அவர்களுக்கு இராணுவத்தால் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. அடிக்கல் நாட்டப்பட்டு கட்ட ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.வன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைவாக, ஐக்கிய நாடுகள் அமையத்தில் பணியாற்றும் சந்தனா அலஹாகூனின் நிதி உதவியுடன் இரண்டு வீடுகள் அமைக்கப்படவுள்ளன. வீடுகளுக்கான அடிக்கல் 21 ஆ வது படைப் பிரிவின் பிரிகேடியர் குமார் ஜெயபத்ரனவால் நடப்பட்டது.இரண்டு மாணவிகளும் கல்வியை தொடர்வதற்காக நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்