பேரனை உயிருடன் பற்றியெரியும் அடுப்பில் தூக்கியெறிந்த தாத்தா- பாட்டி… !! நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்..!!

ரஷ்யாவில் மதுபோதையில் பேரனை அடுப்பில் வேகவைத்த தாத்தா- பாட்டியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.ரஷ்யாவில் ஹக்காசியா பகுதியில் Kharoy கிராமத்தை சேர்ந்த 20 வயதான விக்டோரியா சாகலகாவ், அதிகமான நேரங்களில் தன்னுடைய 11 மாத மகனை பெற்றோரிடம் விட்டு சென்றுள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்றும் கூட விக்டோரியா வெளியில் சென்றிருந்துள்ளார். அப்போது போதையில் இருந்த குழந்தையின் தாத்தா, திடீரென அந்த குழந்தையை அடுப்பில் தூக்கி எறிந்துள்ளார்.

அதனைப் பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இறந்த நிலையில் எரிந்து கிடந்த குழந்தையின் உடலை வெளியில் எடுத்தனர்.அதன் பிறகு மது போதையில் குழந்தையை கொன்ற தாத்தா- பாட்டியை கைது செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.இந்த நிலையில் சமூக வலைதளத்தில் தன்னுடைய மகனின் இறப்பு குறித்து பதிவிட்டுல விக்டோரியா சாகலகாவ், என் நேச குமாரனுக்கு ஆழ்ந்த இரங்கல். என் அருமை மகனே. என் வலியை ஒரு நிமிடம் கூட குறைக்க முடியவில்லை.’நீ என்னுடன் இல்லை என்பதை எப்படி நான் சமாளிக்க முடியும்? நான் உன்னை கட்டி அணைக்க முடியாது. உன்னுடைய அன்பும், கனிவான தோற்றமும் கொண்ட புகைப்படங்கள் மட்டுமே இங்கு உள்ளது.

நான் உன்னுடைய புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் நீ என்னை பார்த்து சிரிக்கிறாய். உன்னை அதிகம் இழக்கிறேன்.

தயவு செய்து ஒரு நிமிடமாவது என்னை பார்க்க வா. என்னுடைய கனவில் வந்து பார். எனக்கு தெரியும் நீ என்னை பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்று’ என எழுதியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்