சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அதிரடியாக நீக்கம்….!!

சுங்கத்திணைக்கள பணிப்பாளராக இருந்த பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அவர் பதவிவகித்த காலப்பகுதியில், மாவட்ட செயலகத்தில் பெருமளவு ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அப்போது அரசியல் செல்வாக்கின் மூலம் விசாரணைகளை தடுத்து வைத்திருந்தார், விசாரணைகளை மூடிமறைக்கும் விதமான புதிய நிர்வாகம் ஏற்படுத்தப்பட முயற்சிக்கப்படுகிறது என்றும் அப்போது பரவலாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

இந்த விவகாரங்கள் குறித்து முறையான விசாரணைகள் அப்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும், கடந்த சில மாதங்களின் முன்னர் அப்போதைய ஊழல் விவகாரங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சுங்கப்பணிப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்