திருமலையில் அம்பலமான பாரிய மோசடி….! திடீர் சோதனையில் சிக்கிய பெரும் தொகையான கள்ள நோட்டுக்கள்….!

திருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் ஒரு இலட்சத்து 75,000 ரூபாய் கள்ள நோட்டுக்களுடன் சந்தேக நபரொருவரை புதன் இரவு கைது செய்துள்ளதாக மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த அபூபக்கர் தௌபீக் 52வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.மொரவெவ பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரை மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி எச். எம். பீ. குலதுங்க குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ். பீ. விமல் மற்றும் சமன்த(39035), ரத்னசேகர(67627), துலானி(9985), குமாரி(10175) ஆகியோர் சென்று சோதனையிட்ட போது அவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதில் ஐயாயிரம் ரூபாய் தாள்கள் 16, ஆயிரம் ரூபாய் தாள்கள் 95 அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணை செய்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதேவேளை ஹொரவபொத்தான நகர்ப்பகுதியில்29, 1000 ரூபாய் தாள்கள் உடன் திருகோணமலை – மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்களை ஹொரவபொத்தான பொலிஸார் கைது செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்