சரித்திரப் பிரசித்தி பெற்ற திருவருள் மிகு தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய மேற்கு வாசல் ராஜகோபுர மஹாகும்பாபிஷேகப் பெருவிழா……

வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை அருள் மிகு ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் மேற்கு வாசல் கோபுர கும்பாபிசேகம் நேற்று வெகுவிமர்மையாக பக்திபூர்வமாக இடம்பெற்றது.இவ் ஆலயத்தின் கும்பாவிசேக கிரிகைகள் கடந்த 27.01.2019 அன்று விநாயகர் வழிபாடு, ஆசார்யவருணம், அனுக்சை,கோமாதா பூஜையுடன் ஆரம்பமாகிய குப்பாவிசேக கிரிகைகள் கடந்த இரண்டு இடம்பெற்று  காலை புண்யாகவாசனம் யாகசாலை விசேட பூஜைகளுடன் ஆரம்பமாகி கருவரையில் வீற்றுயிருக்கும் துர்க்கையம்மன்,மற்றும் வசந்தமண்டவத்தில் அருள்பாலிக்கும் அம்மாளுக்கு விசேட அபிசேங்கங்கள்,ஆராதணைகள் என்ப இடம்பெற்றன.இதனைத் தொடந்து யாகசாலையின் பூர்ண கும்பாவிசேத்திற்கான மகாபூர்ணாகதி தீபாராணை கிரகப்பிரீதி யாத்திராதானம் அந்தர்பகிர்பலி,திருமுறை பாராயாணம் இடம்பெற்று பூரண கும்பகருவரை யாகசாலையில் இருந்து அந்தணர் சிவாச்சாரியார்களிலால், உள்வீதியுடாக மற்றும் வெளிவீதியுடாக எடுத்துவரப்பட்டு பின்னர் சுபநேரம் 09.55 மணியளவில் மேற்கு கோபுரவாசத்தின் புதிய கோபுர கும்ப கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டு அபிசேக,ஆராதணைகள் என்ப இடம்பெற்றது. இவ் கும்பாவிசேககிரிகைகளை சிவ ஸ்ரீ. மஹாராஐ ஸ்ரீ து.இரத்தினசபாபதி,மற்றும் ஆ. சேதுராஐதா ஆகிய குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு இவ் கிரிகைகளை நடாத்திவைத்தனர். இதில், பல பாகங்களில் இருந்து வருகைதந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இஸ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.

– ரமணன் –

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்