2020ஆம் ஆண்டு ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு…!!

அவுஸ்ரேலியாவில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.உலக கிரிக்கெட் இரசிகர்களின் எதிர்ப்புக்குரிய தொடராக அமைந்துள்ள இத்தொடர், எதிர்வுரும் 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இதில், தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் ஏற்கெனவே தகுதி பெற்று விட்ட நிலையில் மீதமுள்ள 8 அணிகளுக்கு தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெறுகின்றன.

இதற்கு முன்னதாக ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.முன்னணி அணிகளான இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் தகுதி சுற்றுப் போட்டிகளில் விளையாடுகின்றன.ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரை லீக் சுற்றுப்போட்டிகள் நடைபெறுகின்றன.நவம்பர் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், 15ஆம் திகதி இறுதிப்போட்டியும் நடைபெறுகின்றன.

இத்தொடரில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் குழு ஒன்றில் பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, விண்டிஸ், நியூசிலாந்து, தகுதி சுற்று போட்டிகளில் வெற்றிபெறும் இரு அணிகள்.

குழு இரண்டில், இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான், தகுதி சுற்று போட்டிகளில் வெற்றிபெறும் இரு அணிகள். என இரண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.ஒட்டுமொத்தமாக இத்தொடரில் 45 போட்டிகள் நடைபெறுகின்றன. 16 அணிகள் பங்கேற்கின்றன. 7 நகரங்களில், 7 இடங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறன.

இதேபோல பெண்களுக்கான ரி-20 உலகக்கிண்ண தொடர், 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி முத் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 5ஆம் திகதியும், இறுதிப் போட்டி மார்ச் 8ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் குழு ஒன்றில் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இலங்கை, குழு ஒன்றில் தகுதி பெறும் அணி.

குழு இரண்டில், இங்கிலாந்து, விண்டிஸ், தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், குழு இரண்டில் தகுதி பெறும் அணி. என இரண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒரே நாட்டில், ஒரே ஆண்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ரி-20 உலகக்கிண்ண தொடர் நடைபெறுவது இதுவே வரலாற்றில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.ஒரே ஆண்டில், ஒரே நாட்டில் ஆடவர், மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை நடப்பது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்