இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ? இன்றைய ராசி பலன்….(30.01.2019)

30-01-2019 புதன்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 16-ம் நாள்.

தேய்பிறை. தசமி திதி இரவு 7.31 மணி வரை பிறகு ஏகாதசி. அனுஷ நட்சத்திரம் இரவு 8.25 மணி வரை பிறகு கேட்டை. யோகம்: சித்தயோகம்.

நல்ல நேரம் 6-7.30, 9-10, 1.30-3, 4-5, 7-10.
எமகண்டம் காலை மணி 7.30-9.00.
இராகு காலம் மதியம் மணி 12.00-1.30.
குளிகை: 10:30 – 12:00.
சூலம்: வடக்கு.

பொது: திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம் , திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோயிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.
பரிகாரம்: பால்.மேஷம்:

சந்திராஷ்டமம் தொடர்வதால் வெளுத்த தெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். வளைந்து செல்ல வேண்டிய நாள்.

ரிஷபம்:

சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரவகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

மிதுனம்:

பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கடகம்:

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.

சிம்மம்:

எதிர்ப்புகள் அடங்கும். தாயாருக்கு மருத்துவச்செலவுகள் ஏற்படும். புதுவேலை அமையும். பயணங்களால் ஆதாயம் உண்டு. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கன்னி:

துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.அரசால் ஆதாயம் உண்டு.வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்:

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

விருச்சிகம்:

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் சண்டை,சச்சரவு வந்து நீங்கும்.அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைகுறையும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

தனுசு:

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்,நண்பர்கள் சிலர் பணம் கேட்டுதொந்தரவு தருவார்கள்.அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்:

எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைபுரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள்.

கும்பம்:

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்