பதினெட்டு அப்பாவி உயிர்களைக் காவு கொண்ட மன்னார் கிளைமோர் தாக்குதல்…!! 11 வருட நினைவு நாள் இன்று..!

மன்னார் மாவட்டத்தில் 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி உலகையே உலுக்கிய பயங்கரமான தாக்குதல் இடம்பெற்றது.பள்ள மடுவிலிருந்து மடு நோக்கி பொதுமக்களுடனும், மாணவர்களுடனும் பயணித்த தனியார் பேருந்து கிளைமோர் தாக்குதலுக்குள்ளாகிய சம்பவமே அதுவாகும்.பாடசாலை முடிவடைந்து பகல் 2.30 மணியளவில் இலுப்பைக் கடவையிலிருந்து மடு நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து மடுவை அண்மித்ததும் கிளைமோர் தாக்குதலுக்குள்ளாகியது.

இத் தாக்குதலில் 9 பாடசாலை சிறுவர்கள், ஆசிரியர் ஒருவர், பாடசாலை சிற்றூழியர் ஒருவர், மருத்துவ உதவியாளர் ஒருவர், பேருந்தின் ஓட்டுனர், பேருந்தின் நடத்துனர் என 15 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.3 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்தனர். 11 மாணவர்கள் உள்ளடங்கலாக 21 பேர் படுகாயமடைந்தனர்.

பெரிய பண்டிவிருச்சான் மகா வித்தியாலயம், சிறிய பண்டிவிருச்சான் தமிழ் கலவன் பாடசாலை தற்காலிகமாக தச்சனா மருதமடுவில் இயங்கி வந்தது.பாடசாலை முடிவடைந்து வீடு திரும்புவதற்கு மாணவர்களை ஏற்றி வந்த பேருந்தே இவ்வாறு இலங்கை இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலுக்குள்ளாகியது. இத்தாக்குதல் இடம்பெற்று இன்றோடு 11 வருடம் ஆகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்