தனது காதல் மனைவிக்காக மீண்டும் திருமணச் சடங்கில் ரோஹித்த ….!! கொழும்பு மாநகரில் கோலாகலம்…!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச மற்றும் டட்யானா லீ சில தினங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர்.இந்நிலையில் இந்த தம்பதியினர் கத்தோலிக்க மதத்திற்கமைய திருமண ஆசிர்வாத பூசை இன்று மாலையில் இடம்பெற்றது.இன்று மாலை பம்பலப்பிட்டிய தூய மேரி தேவாலயத்தில் இடம்பெற்ற சிறப்பு திருமண பந்த பூசையில் இணைந்து கொண்டனர். திருமண நிகழ்வை முன்னிட்டு பம்பலப்பிட்டியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பெருந்தொகை அதிரடி படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.கடந்த 24ஆம் திகதி மெதமுலன வீரக்கெட்டிய கிராமத்தில் பௌத்த முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், காதல் மனைவிக்காக கிறிஸ்தவ மனைவிக்காக மீண்டும் திருமண சடங்கில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்