இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்….(26.01.2019)

26-01-2019 சனிக்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

விளம்பி வருடம், தை மாதம் 12ம் திகதி, ஜமாதுல் அவ்வல் 19ம் திகதி, 26-01-2019 சனிக்கிழமை தேய்பிறை, சஷ்டி திதி இரவு 10:55 வரை; அதன்பின் சப்தமி திதி, அஸ்தம் நட்சத்திரம் இரவு 9:20
வரை; அதன்பின் சித்திரை நட்சத்திரம், மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30 – 9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00 – 10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30 – 3:00 மணி
* குளிகை : காலை 6:00 – 7:30 மணி
* சூலம் : கிழக்கு

* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
* பொது : சனீஸ்வரர் வழிபாடு, வாஸ்துநாள் பூஜை நேரம் காலை 10:41-11:17 மணிமேஷம் :

வெகுநாள் தாமதமான செயலில் நன்மை பெறுகிற புதிய திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி செய்வீர்கள்.நிலுவைப் பணம் வசூலாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகைப்பயன் பெற அனுகூலம் உண்டு.

ரிஷபம் :
குடும்ப பெரியவர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பணிகள் காலஅவகாசத்தில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும்.பணவரவை அத்தியாவசிய செலவுகளுக்கு பயன்படுத்துவீர்கள். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள்.

மிதுனம் :
எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். செயல்களில் நிதானம் நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.முக்கியச் செலவுகளுக்கான பணம் கிடைக்கும். இயந்திரப்பிரிவு பணியாளர்கள் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும்.

கடகம் :
முழு அளவில் பயன் அடைய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார த்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும்.உபரி வருமானம் கிடைக்கும். வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

சிம்மம் :
உறவினர் ஒருவரின் கூடுதல் அன்பை தொந்தரவு என கருதுவீர்கள். பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்ற வேண்டும்.தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் பின்பற்றவும்.

கன்னி :
கடந்த நாட்களில் செய்த நற்செயலுக்கான நன்மை தேடிவரும். தொழில், வியாபாரம் செழிக்க அதிகம் பணிபுரிவீர்கள்.கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். சுற்றுத்தாருடன் இருந்த மனவருத்தம் சரியாகும்.

துலாம் :
அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத்தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் வருகிற இடையூறுகளை சரிசெய்வதால் உற்பத்தி விற்பனை சீராகும்.எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

விருச்சிகம் :
குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி நிலையை கண்டு பிறர் வியப்படைவர்.தாராள பணவரவு கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

தனுசு :
திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றி கூடுதல் நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும்.உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.

மகரம் :
சிரமங்களை சரிசெய்ய திட்டமிடுவீர்கள். முயற்சிக்கான பலன் ஓரளவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் போட்டியை எதிர்கொள்வீர்கள்.பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

கும்பம் :
செயலை சிலர் கேலி, கிண்டல் செய்து பேசுவர். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பொருள் இரவல் கொடுக்க வேண்டாம்.

மீனம் :
சமயோசிதமாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில்,வியாபாரத்தில் முன்னர் செய்த அபிவிருத்தி பணி நல்ல பலன் தர ஆரம்பிக்கும். பணவரவு உறவினர்களின் உதவி கிடைக்கும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்