ஒரு வேளை உணவுக்காக தெருவில் நின்று கையேந்தும் சிறுமிகள்….!! தமிழர் பிரதேசத்தில் நடக்கும் பெரும் அவலம்…. !!

வாகரை பிரதேச செயலாளார் பிரிவுக்கு உட்பட்ட கதிரவெளி கிராமத்தின் பிரதான வீதியில் பெண் சிறுமிகள் உணவுக்காக கையேந்தும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண் பிள்ளைகளுக்கு அவ்விடத்தில் சிறந்த பாதுகாப்பு கூட இல்லை. இன்று சமூகத்தில் பெண்களுக்கு எத்தனையோ சீர்கேடுகள் தினமும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.இப்படியான சந்தரப்பத்தில் இந்த பெண் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இதேவேளை, வாகரை பிரதேச செயலாளர் உட்பட அரசாங்க உத்தியோஸ்தர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் தெருவில்கையேந்தும் பெண் குழந்தைகளுக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted by Vijenthiran Vije on Thursday, January 24, 2019

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்