இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ? இன்றைய ராசி பலன்…(25. 01.2019)

25-01-2019 வெள்ளிக்கிழமை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

விளம்பி வருடம், தை மாதம் 11ம் திகதி, ஜமாதுல் அவ்வல் 18ம் திகதி, 25-01-2019 வெள்ளிக்கிழமை தேய்பிறை.

பஞ்சமி திதி இரவு 12:36 வரை; அதன்பின் சஷ்டி திதி, உத்திரம் நட்சத்திரம் இரவு 10:24 வரை; அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், சித்த-அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00-10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30-12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00-4:30 மணி
* குளிகை : காலை 7:30-9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்

சந்திராஷ்டமம் : சதயம்,பூரட்டாதி

பொது : மகாலட்சுமி வழிபாடு, கரிநாள்.மேஷம் :

நண்பரின் உதவி கிடைக்கும். வாழ்வின் முக்கியமான லட்சியம் ஒன்றை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்.தாராள பணவரவில் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிகர சூழ்நிலை இருக்கும்.

ரிஷபம் :

பணிகளுக்கு தகுந்த முன்னேற்பாடு செய்ய வேண்டும். தொழில், வியாபார நடைமுறை சராசரி அளவில் இருக்கும்.சேமிப்புப் பணம் செலவுகளுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மிதுனம் :

புதிய பணிகளால் அதிருப்தி உண்டாகும். அறிவாற்றலால் சில நன்மை பெறலாம்.தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். நிர்ப்பந்தத்தின் பேரில் அதிக பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.

கடகம் :

மனதில் உற்சாகம் பிறக்கும். பேசுவதில் வசீகரம் இருக்கும். முக்கியமான செயலில் சமயோசிதமாக ஈடுபடுவீர்கள்.தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். வீடு வாகனத்தில் மாற்றம் செய்வீர்கள்.

சிம்மம் :

நண்பரின் விமர்சனம் மனதில் வருத்தம் தரலாம். தொழில், வியாபார நடைமுறையில் உள்ள அனுகூலம் பாதுகாத்திடுவீர்கள்.சராசரி பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் செய்வீர்கள். மாணவர்கள் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

கன்னி :

உறவினர் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை நிறைவேற்றுவீர்கள்.தாராள பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் அரசு சார்ந்த உதவி பெறுவர்.

துலாம் :

குடும்ப உறுப்பினர் அதிக பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும்.முக்கியமான தேவைக்கு கொஞ்சம் கடன் பெறுவீர்கள். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

விருச்சிகம் :

குடும்ப பிரச்சனையில் சுமுக தீர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு எளிதாக நிறைவேறும்.நிலுவைப் பணம் வசூலாகும். நண்பருக்கு தேவையான உதவிபுரிவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.

தனுசு :

அவமதித்தவர் அன்பு பாராட்டுவர். செயல்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். திருப்திகர அளவில் பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்துவீர்கள்.

மகரம் :

மனதில் குழப்பமான சிந்தனை உருவாகி சிரமம் தரலாம். நண்பரின் மதிநுட்பம் நிறைந்த ஆலோசனை நம்பிக்கை தரும்.தொழில் இலக்கு தாமதமாகப் பூர்த்தியாகும். அளவான பணவரவு கிடைக்கும். குடும்பச்செலவு அதிகரிக்கும்.

கும்பம் :

எவரிடமும் உதவி கேட்க வேண்டாம். கூடுதல் உழைப்பு தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலையை உருவாக்கும்.அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும்.

மீனம் :

மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இஷ்டதெய்வ அருளால் தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும்.ஆதாய வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்