ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்த வெனிசுவெலா….!! 72 மணி நேரத்திற்குள் நாட்டை வெளியேற காலக்கெடு…!!

அமெரிக்க இராஜதந்திரிகள் தமது நாட்டை விட்டு வௌியேற வெனிசுவேல ஜனாதிபதி நிகலஸ் மதுரோ 72 மணித்தியால கால அவகாசம் வழங்கியுள்ளார்.அத்துடன் தாம் அமெரிக்காவுடனான உறவுகளை முறித்துக் கொள்வதாகவும் தமது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய நிகலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.அமெரிக்கா தொலைவிலிருந்து தமது நாட்டை ஆட்சி செய்ய முயல்வதாகவும் தமது நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பங்கம் விளைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜுஆன் குஅய்டோவை அந்த நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பு வௌியாகி சில நிமிடங்களில் ஜுஆன் குஅய்டோ தம்மை வெனிசுவேலாவின் தலைவராக தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டார்,

இதையடுத்து பிரேஸில் உள்ளிட்ட சில தென் அமெரிக்க நாடுகள் அவரை ஜனாதிபதியாக அங்கீகரித்தன..கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிகலஸ் மதுரோ வெற்றியீட்டியிருந்தார்,இந்தத் தேர்தலை சில எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருந்தன.இந்த நிலையில் மதுரோ தமது இரண்டாவது பதவிக்காலத்தை கடந்த 10 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் வெனிசுவேல எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தன.இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அமெரிக்கா பகிரங்க ஆதரவு வழங்கியது.

இந்த நிலையில், தமது இராணுவம் ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் பேண வேண்டும் என நிகலஸ் மதுரோ அழைப்பு விடுத்துள்ளார்.இதேவேளை தமது பலத்தைக் காட்டும் விதத்தில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக வெனிசுவேல அரசாங்கம் தெரிவிக்கின்றது,

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்