சளித் தொல்லையை நீக்க அற்புதமான அருமருந்து…!!

குளிர்காலத்தில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இவற்றை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் காற்றில் நிறைந்திருக்கும். குளிர்ந்த மற்றும் துரித உணவுகள் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும்.உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கக்கூடிய உணவு பொருட்களே நோய் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். அதில் முக்கியமானது தேன்.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க:

தேனில் இயற்கையாகவே ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதில் தாதுக்கள் மற்றும் விற்றமின் சி, டி, ஈ, கே மற்றும் பி மற்றும் பீட்டா கெரட்டின் அடங்கியிருக்கிறது. தேன் சாப்பிட்டு வந்தால் தூக்கம் சிறப்பாக இருக்கும்.

இதில் ஆண்டிமைக்ரோபியல் தன்மை இருப்பதால் சலி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

இரண்டு தேக்கரண்டி தேனை வெந்நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி தொல்லை இருக்காது. தினமும் காலை எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து வெந்நீரில் கலந்து குடித்து வரலாம். இது உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை அகற்றிவிடும்.

தேன் மற்றும் மிளகு:

ஒரு கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி துளசி சாறு, அரை தேக்கரண்டி மிளகு, அரை தேக்கரண்டி நறுக்கிய இஞ்சி சேர்த்து கொதிக்க வைக்கவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்து வந்தால் சளி தொல்லையில் இருந்து விடுபடலாம்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்