இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்….(24.01.2019)

24-01-2019 வியாழக்கிழமை விளம்பி வருடம் தை மாதம் 10 ஆம் நாள்.

தேய்பிறை. சதுர்த்தி திதி மறுநாள் பின்னிரவு 2.02 மணி வரை பிறகு பஞ்சமி. பூர நட்சத்திரம் இரவு 11.11 மணி வரை பிறகு உத்திரம். யோகம்: சித்தயோகம் இரவு 11.11 மணி வரை பிறகு மரணயோகம்.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9.
எமகண்டம் காலை மணி 6.00-7.30.
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00.
குளிகை: 10:30 – 12:00.
சூலம்: தெற்கு.

பொது: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
பரிகாரம்: நல்லெண்ணெய்.மேஷம்:

புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சகஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

ரிஷபம்:

கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்:

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்த-பந்தங்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வுகிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

கடகம்:

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.வியாபாரத்தில் வேலை யாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

சிம்மம்:

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். முன்கோபத்தால் பகை உண்டாகும்.யாரையும் யாருக்கும் பரிந்துரைசெய்ய வேண்டாம்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

கன்னி:

குடும்பத்தினருடன் வீண்வாக்கு வாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப்பொருட்களை கவனமாக கையாளுங்கள். சகோதர வகையில் மன வருத்தம் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

துலாம்:

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.

விருச்சிகம்:

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள்.வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.

தனுசு:

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். நம்பிக்கைக்குரியவர்கள் சிலர் கைக்கொடுத்து உதவுவார்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப்பேசுவார்கள்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உற்சாகமான நாள்.

மகரம்:

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும்.யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள்இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்:

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். தாய்வழியில் மதிக்கப்படுவீர்கள்.வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.

மீனம்:

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும்.வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்