கண்பரிசோதனை செய்வதற்கு கடைக்குச் சென்ற விசித்திரமான வாடிக்கையாளர்…..!!

பிரான்ஸிலுள்ள ஒரு கண் பரிசோதனைக் கூடத்திற்கு கண்ணாடிகளை கொள்வனவு செய்ய வித்தியாசமான வாடிக்கையாளர் ஒருவர் சென்றுள்ளமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பிரான்ஸின் ஹெனெபொன் நகரத்திலுள்ள கடைக்குள் நுழைந்த அல்பகா எனும் விலங்கு சுமார் அரை மணி நேரம் அங்கு கண்ணாடிகளைப் பார்வையிட்டது.அது தப்பி ஓடாமல் இருக்கக் கடை ஊழியர்கள் கதவுகளை மூடியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.எனினும், சிறிது நேரத்தில் அல்பகா எனும் விலங்கின் உரிமையாளர் அதனை அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்