கனடாவின் புதிய உணவு வழிகாட்டிக்கு சுகாதார நிபுணர்கள் வரவேற்பு..!

கனேடிய சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய உணவு வழிகாட்டியை, சுகாதார நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்.இந்த புதிய வழிபாட்டி, கடந்த 2007ஆம் ஆண்டின் பதிப்பைவிட மிக தெளிவான முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.கனடாவின் 2019ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட உணவு வழிகாட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டது.

இந்த புதிய வழிகாட்டி, ஆரோக்கியமான உணவை எவ்வாறு பின்பற்றுவது என்பது தொடர்பாக கனடியர்களை வழிநடத்தும் சிறந்த வழி என கல்கரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், உடற்பருமன் குறித்த ஆய்வாளருமான வைத்தியர் டேவிட் தெரிவித்தார்.கனேடிய மருத்துவ கழகம் போன்ற ஆலோசனைக் குழுக்களும் இந்த புதிய வழிகாட்டியை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்