விளையாட்டு வீரர்கள் உள்ளாடையுடன் நின்றால் என்ன செய்வீர்கள்…? சுடச்சுட பதிலளித்த பெண் பயிற்சியாளர்…..!! ஆடிப் போன அணி நிர்வாகம்…!!

முதல் முறையாக ஜேர்மன் கால் பந்து அணி ஒன்றிற்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பெண் பயிற்சியாளர் ஒருவரிடம் பாலின ரீதியில் பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்க, அதற்கு அவர் பாணியிலேயே சுடச்சுட பதிலளித்தார் அந்த பயிற்சியாளர்.ஜேர்மனியின் BV Cloppenburg அணியின் பயிற்சியாளராக முதல் முறையாக Imke Wubbenhorst என்னும் ஒரு பெண் பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆண்கள் அணி ஒன்றிற்கு பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவரிடம் ஒரு பத்திரிகையாளர், நக்கலாக, உடை மாற்றும் அறைக்குள் நீங்கள் நுழையும்போது, உங்கள் வீரர்கள் உள்ளாடையுடன் நின்றால் என்ன செய்வீர்கள்? உள்ளே நுழையும்போதே வீரர்களை ஒழுங்காக ஆடை அணிந்து நிற்கும்படி எச்சரிப்பீர்களா? என்று கேட்டார்.

அதற்கு, நிச்சயமாக இல்லை, நான் ஒரு புரபஷனல் பயிற்சியாளர், சொல்லப்போனால் வீரர்களின் ஆணுறுப்பின் அளவின் அடிப்படையில்தான் அவர்களை நான் தேர்ந்தெடுக்கிறேன் என சுடச்சுட Imke பதில் கூறியதைக் கேட்டு கேள்வி கேட்டவர் மட்டுமல்ல, அவரது அணி உரிமையாளர்களும் ஆடிப்போய் விட்டார்கள்.

எங்களைப் பொருத்தவரை தரம்தான் முக்கியம் என்று கூறிவிட்டார்கள் Imke அணியின் உரிமையாளர்கள்.

30 வயதாகும் Imke, முன்பு Cloppenburg பெண்கள் அணியைப் பொறுப்பேற்றிருந்தார். ஆனால், அவரது அணியின் உரிமையாளர்கள், அவர் ஆண்கள் அணிக்கு பொறுப்பேற்பதே சிறந்தது என முடிவு செய்ததையடுத்து ஆண்கள் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார் Imke.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்