உங்கள் எண்ணங்களை வணிகம் ஆக்க யாழில் ஒரு களம் !

நீங்களும் தொழில் முனைவோர் ஆகவேண்டுமென்ற ஆர்வம் கொண்டவரா ?தொழில் தொடங்க பணம் வேண்டுமே என்ற எண்ணம் கொண்டவரா நீங்கள்? யாருக்கும் இவ்வுலகில் பணம் பஞ்சம் இல்லை. யோசனை(idea) பஞ்சமே உண்டு!உங்கள் எண்ணத்தை செயல் வடிவம் கொடுத்து தொடக்க நிலை வணிகமாக்கி பெரு நிறுவனமாக்க இதோ ஓா் அரிய வாய்ப்பு.கூகிள் நிறுவனத்தின் அனுசரணையோடு டெக்ஸ்டாா்ஸ் நிறுவனம் உலகின் பல நாடுகளில் நடாத்திவரும் Startup Weekend நிகழ்வு யாழ்ப்பாணத்தில் மூன்றாவது முறையாக இந்த வார இறுதியில் (25,26,27ம் திகதிகளில்) பருத்தி துறை SS Complex மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாா் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கும், ஏற்கனவே வணிகத்தினை நடத்தி வரும் , புதிய வணிக நுட்பங்களை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ள, தொழில்நுட்பத்தில் அடிப்படை அறிவு பெற்ற அனைவரும் பங்கு பற்றி பயனடையலாம்.

கலந்து கொள்ள என்ன தகுதி வேண்டும்?
உங்கள் சமூத்தில் நீங்கள் கண்ட ஏதாவதொரு பிரச்சினைக்கு உங்களால் தீர்வு சொல்ல முடியுமெனில், புதிய வித்தியாசமான வணிக யோசனைகள் உங்களிடம் உண்டெனில் அதை செயல் வடிவம் கொடுத்து தொடக்கநிலை வணிகமாக உருவாக்க உங்களுக்கு உதவ பல நிறுவனங்களின் தலைவா்களின் வழிகாட்டல்களில் உங்களுக்கு தேவையான குழுவினை தோ்ந்தெடுத்து தொழிநுட்பங்களை தோ்ந்தெடுத்து, முதலீட்டு வாய்ப்புகளை பெற்று உங்கள் சொந்த நிறுவனத்தினை ஆரம்பிக்க முடியும்.இந்த நிகழ்வில் என்ன நடக்கும்?
உங்கள் எண்ணக்கருக்களை ( Idea)முன்வையுங்கள்.சிறந்த எண்ணக்கருக்களை தோ்வு செய்யுங்கள். தேர்வு செய்யப்பட்ட அல்லது சிறந்த எண்ணக்கருக்களை இணைந்து கொள்ளுங்கள்.திறமையான நபா்களை உங்களுடன் சோ்ந்து பணியாற்றி குழுவாக நிஜமான படைப்பை, பொருளை, சேவையை உருவாக்கி உங்கள் ப்ராண்டினை உலகிற்கு அறிமுகப்படுத்துங்கள்.உங்கள் வணிகத்தினை இலங்கையின் பிரபல வழிகாட்டிகள் ஆலோசகா்கள் உதவியுடன் மெருகேற்றி காட்சிப்படுத்துங்கள்.வடிவமைப்பாளா்கள் (Designers) மென்பொருள் அபிவிருத்தியாளா்கள் (Developers) தொழில்முனைவோர் (entrepreneurs) ஆகியொருடன் இணைந்து உங்கள் வலையமைப்பை உருவாக்க சிறந்த இடம்.வழிகாட்டிகள், ஆலோசகா்கள், பயிற்சியாளா்கள், மதிப்பிடுவோா் உதவியுடன் தொடக்கநிலை திட்டத்தினை வெற்றி வாய்ப்பாக மாற்ற நமக்கோா் களம்.உங்கள் திறமைகளை வேலையில் காண்பித்து நிஜமான படைப்பினை உருவாக்கவும், குழுவாக இணைந்து பணியாற்றி உங்கள் ப்ராண்டினை உலகிற்கு காட்சிப்படுத்த இது ஒரு சிறந்த தருணம்.மறக்க முடியாத வாரஇறுதி நாட்களாக இருக்கபோகும் இந்த நிகழ்வில் புதிய நண்பா்களுடன் சேர்ந்து புதிய வணிகத்தை ஆரம்பிக்க வாழ்த்துக்கள்.
முகப்புத்தகத்தில் உங்கள் வரவினை உறுதிப்படுத்த இங்கு க்ளிக் செய்யுங்கள். Startup Weekend Jaffna 3.0உங்கள் ஆசனத்தினை பதிவுசெய்திட இந்த இணைப்பை க்ளிக் செய்யுங்கள். Register Now

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்