அந்தமான் கடலில் சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….!! சுனாமி ஆபத்தா…?

அந்தமான்இ நிக்கோபார் தீவுகளில் இன்று காலை பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.6.0 ரிக்டர் அளவில் பதிவாகிய இந்த நிலநடுக்கமானது சுமார் 15 நிமிடங்கள் வரையில் நீடித்திருந்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை எனத் தெரியவருகிறது.

நிலநடுக்கமானது பல கிலோமீற்றர் வரையில் உணரப்பட்டுள்ளதாகவும், கடல் பகுதியிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்தமானில் இந்த வருடத்தில் ஏற்படும் முதல் நிலநடுக்கம் இதுவென குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்