வேற்றுக் கிரக வாசிகள்-அமெரிக்க சிறப்பு படைகள் இடையில் பயங்கர துப்பாக்கிச் சண்டை…!! வெளியாகிய தகவலால் பெரும் பரபரப்பு!!

வேற்றுகிரகவாசிகள்-அமெரிக்க சிறப்புபடைகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்ததை நேரில் பார்த்து கூறியவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஆங்கில இணையதளம் ஒன்று (Express.co.uk) வெளியிட்ட ஒரு புதிய கதை இப்பொழுது சதித்திட்டக் கோட்பாட்டாளர்களிடமும் வேற்றுகிரகவாசி ஆர்வலர்களிடையேயும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து அந்த கட்டுரையில் கூறப்பட்டு இருப்பதாவது;பில் ஸ்கானிடர் என்பவர் இரகசிய இராணுவ திட்டத்திற்காக பணியாற்றி வந்தவர். இவர் வெளியிட்டு உள்ள தகவலில் சாம்பல் நிற வேற்றுகிரகவாசிகள் மற்றும் அமெரிக்க சிறப்புப் படைகளுக்கு இடையே நியூ மெக்சிகோவில் உள்ள டுல்ஸ் பகுதியில் ஆபத்தான துப்பாக்கி சண்டை நடந்து உள்ளது என கூறி உள்ளார்.

இதில் நேரில் கண்ட சாட்சியாக அவரை மேற்கோள் காட்டியுள்ள அறிக்கையில் சாம்பல் நிற வேற்றுகிரகவாசிகளுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த மோதலின்போது, மேம்பட்ட வேற்றுகிரகவாசிகள் பிளாஸ்மா துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் அவர்கள் அமெரிக்க சிறப்பு படைகளை விட வெளிப்படையாக சக்திவாய்ந்தவர்களாக இருந்தனர் என்று கூறி உள்ளார்.ரோஸ்வெல் யுஎஃப்ஒ சம்பவத்திலிருந்து, பல சதி கோட்பாட்டாளர்கள் இதற்கு முன்பு மனிதர்கள் சாம்பல் நிற வேற்றுகிரகவாசிகளை சந்தித்ததாக கூறி உள்ளனர்.அந்த யுஎஃப்ஒ விபத்திற்கு போலீசார் வேற்றுகிரகத்தவர்களை காவலில் வைத்தனர். விரைவில் ஒரு சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆனால், ஸ்கானிடர், வேற்றுகிரகவாசிகள் மற்றும் மனிதர்களுக்கு இடையே ஒரு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது என கூறுகிறார். அதன் விளைவாகவே இந்த டுல்ஸ் மோதல் நடந்து உள்ளது என கூறி உள்ளார். மேலும் இந்த மோதலில் வேற்றுகிரகவாசிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஸ்கானிடர் கூறி உள்ளார்.இந்த மோதல் குறித்து ஆய்வு செய்த நபரும் யூஎஃபோ ஹைவே ஆசிரியருமான அந்தோனி சான்சஸ் கூறும்போது, இராணுவ பிரிவுகள் – சீல்ஸ் மற்றும் டெல்டா படைகள் உயரமான சாம்பல் நிற வேற்றுகிரகவாசிகளுடன் சண்டையிட்டு உள்ளனர். இதில் அனைத்து இராணுவ அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர். மோதலின்போது ஸ்கானிடர் கையின் ஒரு பகுதியை வேற்றுகிரகவாசிகளிடம் இருந்த பிளாஸ்மா ஆயுதம் தாக்கியது என கூறினார்.

1996 ஆம் ஆண்டில் ஸ்கானிடர் தனது அபார்ட்மெண்ட்டில் மர்மமான முறையில் இறந்துவிட்டார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சதி கோட்பாட்டாளர்கள் இந்த சாவில் மர்மம் இருப்பதாக கூறினாலும் இது தற்கொலையாக அறிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்