நிலவின் இருண்ட பகுதியில் பருத்தி விதை…!! பெரும் சாதனையில் சீன விஞ்ஞானிகள்…!!

சீனா சாங் இ – 4 மூலம் ஆய்வுக்காக நிலவின் மறுபக்கத்திற்கு அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க ஆரம்பித்துள்ளதாக சீன விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன் நிலவின் மறுபக்கம் அதாவது இருண்ட பக்கத்திற்கு சாங் இ- 4 என்ற விண்கலத்தை அனுப்பி உள்ள நிலையில், இதுவரை எவரும் நிலவின் இருண்ட பக்கத்தை பார்த்ததே இல்லை. அது எப்படி இருக்கும் என்பதனை முதன் முறையாக சீன ஆய்வு சாட்டலைட் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.சீனா கடந்த மாதம் 8 ஆம் திகதி சாங் இ- 4 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இம் மாதம் 3 ஆம் திகதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் எவரும் பார்த்திராத பகுதியில் இறங்கியது.

நிலவின் மறுப்பக்கத்தில் எவரும் இதுவரை கண்டிராத புகைப்படங்களை சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது. நிலவில் பூமியை போல் இல்லாமல் சற்று மாறுபட்டே அங்கு கால சூழல் அமைகிறது. அதாவது பூமியின் கணக்குபடி 14 நாட்கள் இரவாகவும், 14 நாட்கள் பகலாகவும் நிலவில் இருக்கும் என்பது பலருக்கு தெரியாது.பகலில் அதிக வெப்பமாகவும் இரவில் கடும் குளிராகவும் இருக்கும்.அதாவது விஞ்ஞானிகளின் கணக்குபடி பகலில் 127 டிகிரி செல்சியஸ் வெப்பமாகவும், இரவில் ௧83 டிகிரி செல்சியஸ் உறை பனியாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளனர். மேலும், விண்கலம் பழுதடையாமல் இருக்க அதில் உள்ள வெப்ப மூட்டிகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், அந்த கருவிகள் உருவாக்கும் மின்சக்திகள் பெற்று நிலவின் குளிர் நிலையை துல்லியமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் விண்வெளி ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, பருத்தி விதைகள், மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.ஆய்வுக்காக கொண்டு சென்ற பருத்தி விதைகள் முளைக்க ஆரம்பித்து உள்ளன என புகைப்பட ஆதாரங்களோடு சீனா தகவல் வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்