சொந்த சகோதரியையே கர்ப்பமாக்கிய 14 வயதுச் சிறுவனுக்கு விதிக்கப்பட்ட கடூழியச் சிறைத் தண்டனை….!!

மலேசியாவில் 16 வயதேயான சொந்த சகோதரியை கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அங்குள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.குறித்த சிறுமி தங்களது குடியிருப்பில் உள்ள கழிவறையில் பிள்ளை பெற்ற நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.மலேசியாவின் Taman Diawan பகுதியிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரசவத்தின்போது குழந்தை தரையில் விழுந்ததில் அதன் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விவாகரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 14 வயதேயான பாடசாலை மாணவன் நீதிமன்றத்தில் முகத்தை மூடியவாறே வந்துள்ளான்.நீதிமன்ற விசாரணையின்போது தமது குற்றத்தை குறித்த சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளான். இதனையடுத்து 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஷரியா சட்டப்படி சவுக்கடியும் வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதையும் வெளியிட நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்