தீவிரம் பெறும் பௌத்த மயமாக்கல்…பிள்ளையார் ஆலயத்தில் தைப் பொங்கல் விழாவை குழப்புவதற்கு முயற்சி….??

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடு மேற்கொள்ள சென்ற கிராம மக்களுக்கு தென்பகுதி பெரும்பான்மையினரால் இடையூறு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் நிலமையை கட்டுப்படுத்த இராணுவம், காவற்துறை தலையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்றைய தினம் பொங்கல் விழா இடம்பெறும் என்று ஆலய நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த கோவிலின் வளாகத்தைபலவந்தமாக கைப்பற்றி விகாரை அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த ஆலயத்தின் பெயரை ‘கணதேவி தேவாலய’ என்று புதிய பெயர்ப்பலகை இட்டு புதிதாக பாரிய புத்தர்சிலையொன்றை திறக்கமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் ஆலயவளாகத்தில் விகாரை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், பிரதேசசபை, பொதுமக்கள், பிரதிநிதிகள்மற்றும் ஆலய நிர்வாகம் என்பன கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அடுத்து பௌத்தர்களே, இல்லாத இடத்தில் பௌத்த விகாரையின் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.எனினும் கடந்த ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மஹிந்தராஜபக்ஸவை நாட்டின் பிரதமராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமித்ததை அடுத்து, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் ஆலயவளாகத்தில் விகாரை அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருந்தன.

இதற்கமைய விகாரை அமைக்கும் கட்டுமானப்பணிகள்முன்னெடுக்கப்பட்டு நீராவியடிப் பிள்ளையார் பழைய செம்மலை எனக் குறிப்பிடப்பட்டிருந்த பழமையான பெயர் நீக்கப்பட்டு, தற்போது கணதெவிதேவாலயம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு புதிதாக புத்தர் சிலைஒன்றை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகளும்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையிலேயே, இன்றைய தினம் பொங்கல் விழாவை நடாத்த முயற்பட்ட போது தென்பகுதி மக்களால் இடையூறு விளைவிக்கப்பட்டள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்