சங்கக்காரவுடன் பல மணிநேரம் மந்திராலோசனை நடத்திய ஐ.தே.காவின் பிரபலம்

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த அமைச்சர் அமைச்சர் ராஜித சேனாரத்னவும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கடந்த 4ஆம் திகதி சுகாதார அமைச்சில் ராஜிதவின் உத்தியோகபூர்வ அறையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொது மக்களின் சுகாதார தன்மையை அதிகரிக்கும் திட்டம் ஒன்றிற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அமைச்சில் இருந்தவர்களிடம் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இரண்டறை மணித்தியாலங்கள் இது குறித்து கலந்துரையாட அவசியங்கள் உள்ளதா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த கலந்துரையாடல் அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.ஐக்கிய தேசிய முன்னணியினால் புதிய முன்னணி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த இரகசிய சந்திப்பு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்